சன்.டி.வி. நிகழ்ச்சியில் கிடைத்த 10 நிமிடங்கள் மூலமாக உங்களை போன்ற உள்ளங்கள் இந்தியா மட்டுமின்றி உலகின் வௌ;வேறு மூலைகளிலிருந்தாலும்ää உடனடியாக என் குழந்தைகளுக்கு நன்கொடைகள் அனுப்பி பேராதரவு அளித்தனர். நாங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது இவர்கள் உதவியதால் தான்ää என் குழந்தைகளுக்கு பூந்தமல்லியில்ää மேவலூர் குப்பம்ää கிறுத்துவக் கண்டிகைää வளர்புரம் போஸ்ட்ää ஸ்ரீபெரம்பதூர் தாலுக்காää காஞ்சிபுரம் (Dist) என்ற முகவரியில் சுமார் ஒரு ஏக்கர் இடம் வாங்க முடிந்தது.
இந்த இடத்தில் என் குழந்தைகளுக்கு உடனடியாக விடுதிகள் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் எனது வீட்டில் 52 ஆதரவற்ற குழந்தைகள் நல்ல முறையில் படித்து வருகின்றனர். எனினும் இது நான் குடும்பத்தோடு வசிப்பதற்காக முதன்முதலில் கட்டிய வீடு என்பதால்ää குழந்தைகளுக்கு போதுமான கழிவறைகள்ää மற்றும் விளையாடுவதற்கு தாராளமான இடவசதி இல்லை. இதனால் என் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான சூழல் தேவைப்படுகிறது.
இடப்பற்றாக்குறையினால்ää ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் கூட மற்ற குழந்தைகளையும் எளிதில் பாதிக்கலாம். மேலும் 38 மாற்றத்திறனாளிகளை சென்னைää வளசரவாக்கத்தில் அமர்த்தி மாதம் ஒன்றிற்கு ரூ. 25,000/- வாடகை கொடுத்து பராமறித்து வருகிறேன்.
எனவே பூந்தமல்லியில் வாங்கியிருக்கும் ஒரு ஏக்கர் இடத்தில் இப்பொழுதுள்ள உடனடி தேவைக்காகää குழந்தைகள் தங்க ஒரு வளாகம்ää மாற்றுத்திறனாளிகள் தங்க ஒரு வளாகம் மற்றும் நடனப் பயிற்சி கூடம்ää சமையல் அறை மற்றும் உணவு விடுதி மட்டுமே அமைக்க சுமார் 1½ கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
என் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்கையை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கொடையுள்ளம் கொண்ட அனைவரும் குழந்தைகளுக்கும்ää மாற்றுத்திறனாளிகளுக்கும் விடுதிகள் கட்ட தங்களால் இயன்ற நிதி உதவி அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
|