லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்கிற நிறுவனத்தை நிறுவியவர் திரு..லாரன்ஸ் என்பவர். இவர் மிகவும் பிரசித்திபெற்றவர் எப்படி என்றால் அவர் சினிமாதுறையில் நடன இயக்குனராகவும்ää நடிகராகவும்ää இயக்குனராகவும்ää இசைதுறை இயக்குனர் ஆகவும் தெலுங்கு சினிமா பிரிவிலும் தமிழ் திரைப்பட பிரிவிலும் பணியாற்றி கொண்டிருப்பவர். இவர் சினிமாத்துறையில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கினாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தபோதிலும் இவர் இந்த துறையில் மட்டும் பணி ஆற்றாமல் சமூக சேவைப்பணியில் ஈடுப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முதலிடம் கொடுத்து அவர்களுக்கு பலவழிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அவரது அறக்கட்டளை மூலமாக பலபேருக்கு பலவழிகளில் பெரிதும் உதவி செய்து வருகின்றார். இவரது இந்த பணிகளை பார்த்து உணர்ந்த இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் பலர் இவருக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் நிதி உதவியும் அளித்து இவருக்கு ஊக்கம் தெரிவித்து வருகின்றனர். இது போன்று மனசு எல்லோருக்கும் வருவது என்பது அரிது. ஆனால் தெய்வத்தின் அருளால் இவருக்கு இந்த மனோபக்குவம் கிடைக்கப்பெற்று இன்று எல்லோருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றார். |